முகமூடியை போட்டு கொண்டு ட்ரைலரில் மக்களைத் துன்புறுத்திய பீஸ்ட் பட வில்லன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக்காவீங்க..

beast-vijay-

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி அசத்தி வருகிறது. ட்ரைலர் மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரத்தில் சுமார் 19 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து கண்டுகளித்துள்ளனர் இதனால் இதற்கு முன் வந்த ட்ரெய்லர்களின் சாதனையையும் முந்தி முன்னேறி உள்ளது விஜய்யின் பீஸ்ட்.

இந்த படத்தின் டிரைலரும் சற்று வித்தியாசமாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க மாலில் நடக்கும் பிரச்சனைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது அதாவது வில்லன்கள் ஒரு மாலில் உள்ளே நுழைந்துமக்களை அடைத்து விடுகின்றனர். இதிலிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் காமெடி, ஆக்ஷன் ஆகியவை அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு முக்கிய வில்லன் நடிகர்களும், காமெடி நடிகர்களும் நடித்து அசத்தியுள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் ஒரு காட்சியில் முகமூடி போட்டு ஒரு வில்லன் மக்களை மிரட்டுவார்.

முகமூடி போட்ட வில்லன் யார் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது . முகமூடி போட்ட நபர் வேறுயாருமல்ல மலையாள சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிரபலமடைந்த உள்ள  ஷைன் டாம் சாக்கோ  என கூறப்படுகிறது.

beast villan
beast villan

அதை அவரே உறுதிப்படுத்தும் வகையிலான முகமூடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயம் இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ நடிப்பு மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..

shain tom