தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது சன் பிக்சர் நிறுவனம். அனிருத் இசையில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு செல்வராகவன், அபர்ணா தாஸ், அங்கூர் சுஜாதா பாபு, விடிவி கணேஷ், கவின் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் மற்றும் அங்கூர் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக யார் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அது வேறு யாரும் கிடையாது செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த சுஜாதா பாபு தான் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகிய டாக்டர் திரைப்படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி இந்த திரைப்படத்திலும் இணைந்துள்ளார் இவர் டாக்டர் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருந்தார் அதேபோல் பீஸ்ட் திரைப்படத்திலும் காமெடி ரோலில் நடித்து இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல். செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அப்டேட் வெளிவந்த நிலையில் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்தநிலையில் தளபதி அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.