நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படம் நாளை 13ஆம் தேதி உலக அளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.
பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், யோகிபாபு ,அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள ஒவ்வொரு பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அரபி குத்து பாடல் பல மொழிகளை கடந்து மிகப்பெரிய வைரலானது. காமெடி ரொமான்ஸ் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஷான் டாம் சாக்கோ வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விடிவி கணேஷ், ரெட்டியின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர்களும் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றது. மேலும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அமோக வரவேற்ப்பு இருக்கிறது அதேபோல் பல நாடுகளில் பீஸ்ட் படத்திற்கு முன் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது இது நிலையில் அஜித்தின் வலிமை சூரியாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட பீஸ்ட் திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அஜித்தின் வலிமை திரைப்படம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களின் மொத்தம் வசூல் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது கேரளாவில் இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு கேரளாவில் முதல் நாள் புக்கிங் 4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இதன் மூலம் விஜய் நடித்த வலிமை திரைப்படம் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முழு வசூலையும் புக்கிங் வசூலில் பீஸ்ட் முறியடித்துள்ளது.