தமிழ் சினிமாவில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி சரியான திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழி சினிமாக்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். முகமூடி திரைப்படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். பீஸ்ட் திரைப்படத்தினை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே க்கை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு,அபர்ணா தாஸ் உள்ளிட்ட இன்னும் பலரும் நடித்து வருகிறார்கள். இவ்வாறு மாஸ் ஹீரோவான விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக செட்டுகள் போடப்பட்டுள்ளது. அந்த செட்டில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடனம் ஆட உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இத்திரைப்படம் ஹோலிவுட்க்கு நிகராக இருக்க வேண்டும் என்பதற்காக நெல்சன் திலிப்குமர் இத்திரைப்படத்தை மிகவும் கவனமாக உருவாக்கி வருகிறாராம்.
இவர் எதிர்பார்க்கும் வகையில் படக்குழுவினரும் தங்களால் முடிந்தவரை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்களாம். அந்த வகையில் மாஸ்டர் அன்பறிவு திரைப்படத்தினை பற்றி கூறும்பொழுது தமிழில் வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படம் என்றும் இதுவரை கண்டிராத அளவிற்கு இத்திரைப்படத்தின் தன்மை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.