தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அதனால் பப்ரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் யோகிபாபு அபர்ணா தாஸ் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் அரபி குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து டீஸர் அல்லது டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி பீஸ்ட் படக்குழு சன் டிவியில் பேட்டி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நாளை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அல்லது டீசர் தேதியை நாளை அறிவிக்க போகிறார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதோ அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022