பீஸ்ட் படத்தில் ஒரே ஒரு சீன் வைத்து ஒட்டுமொத்த அஜித் விஜய் ரசிகர்களிடையே கொளுத்திப் போட்ட நெல்சன்.! பற்றி எரியும் சமூக வலைத்தளம்

ajith beast
ajith beast

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது  இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவந்தது. ஆனாலும் படத்தில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் ஏதாவது ஒரு சர்ச்சையை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது அதாவது பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை காட்சி ஒன்று முடிந்தவுடன் தீவிரவாதி ஒருவனை விஜய் கட்டி இழுத்துக் கொண்டு வருவார் அதை பார்த்துக் கொண்டிருக்கும் விடிவி கணேஷ் மனுஷனை இழுத்து வர சொன்னா ஒரு ஆமையை கட்டி இழுத்து வரானே என கூறுவார்.

இந்த வசனம்தான் சமூகவலைதளத்தில் மிகப்பெரிய சண்டையை உருவாக்கியுள்ளது ஏற்கனவே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் யாருக்கு முதலிடம் என்பது வைத்த அடிக்கடி போட்டி போட்டுக் கொள்வார்கள் என்னதான் அஜித் மற்றும் விஜய் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

இப்படி இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோல் காட்சியை வைத்து தேரை இழுத்து   நடுத்தெருவில் விடுவதுபோல் இருதரப்பு ரசிகர்கள் இடையே சண்டையை மூட்டி விட்டார் நெல்சன் இதை வைத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் கடுமையாக விவாதம் செய்து வருகிறார்கள்.

அதேபோல் இதற்கு முன் வெளியாகிய அஜித்தின் வலிமை திரைப்படத்தின் பொழுது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்படியிருக்கும் நிலையில் நெல்சன் இதுபோல் ஒரு காட்சியை வைத்து இரு தரப்பு ரசிகர்களிடயே பற்ற வைத்து விட்டார் இது எங்கே போய் முடியுமோ என பலரும் கூறி வருகிறார்கள்.