தமிழ் சினிமாவுலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிப்பதோடு சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் குறையாமல் இருக்கின்றன இதனால் விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் கைகொடுத்து பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். படக்குழு போஸ்ட் பிரமோஷன் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது மறுபக்கம் இந்த படத்தில் இருந்து வருகிறது.
பல்வேறு அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அந்த வகையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அரபி குத்து பாடல் வெளியாகி மக்களை கவர்ந்து இழுத்த நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா போன்றவற்றை மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் இந்த திரைப்படம் ஒரு வழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதே நாளில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த யாஷின் கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது இதனால் மிகப்பெரிய இரண்டு திரைப்படங்கள் போதும் என கூறப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பின்வாங்கிய ஒரு நாளுக்கு முன்பாகவே படம் வெளிவருகிறது ஆம் ஏப்ரல் 13ம் தேதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது அடுத்த நாளில் தான் யாஷின் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.