தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் நீண்ட நாட்களாக தொலைக்காட்சியில் எந்த ஒரு இண்டர்வியூவும் கொடுக்கவில்லை இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காததால் விஜய் சன் தொலைக்காட்சியில் இன்டர்வியூ கொடுத்துள்ளார்.
இந்த இன்டர்வியூவில் தளபதி விஜய் இடம் நெல்சன் திலீப்குமார் கேள்விகளை கேட்டுள்ளார் அப்பொழுது நெல்சன் விஜயிடம் 4 கார்கள் இருக்கும்போது எதற்காக சைக்கிளில் சென்றார் என கேள்வியை எழுப்பியுள்ளார் அது மட்டுமில்லாமல் இன்னும் பல சுவாரசியமான கேள்விகளை நெல்சன் திலிப்குமார் விஜயிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய் சன் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பீஸ்ட் திரை படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் சாதனையை நிகழ்த்தியது என தெரிந்தது அது மட்டுமில்லாமல் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.