பீஸ்ட் பட போஸ்டரில் இந்த விஷயங்களை கவனித்தீர்களா.! செம சுவாரஸ்யமான தகவல்

beast
beast

கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், யோகி பாபு அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த  பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி  என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது ரசிகர்களிடம். மேலும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் விஜய்யின் முதல் pan-india திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட்  திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்  வெளிவந்தவண்ணம் இருக்கின்றன இந்த நிலையில் படத்தை ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல்  படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது படக்குழு.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது இந்த நிலையில் திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது un சீன் பிக்சர் என்ற பெயரில் வெளியாகிய இந்த திரைப்படத்தின் போஸ்டர் இணையதளங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த போஸ்டரில் விஜய் செம ஸ்டைலாக கையில் துப்பாக்கியுடன் கெத்தாக நிற்கிறார். இந்த புகைப்படம் போக்கிரி மற்றும் துப்பாக்கி திரைப்படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தைப் பொறுத்தவரை ஷாப்பிங் மால் போன்ற பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்புகளால் அதை எதிர்கொள்ளும் கதையில் தளபதி விஜய்  நடித்துள்ளார்.

ஷாப்பிங் மாலில் உள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் ஒன்லைன் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே நாளில் நடக்கும் கதையாக சொல்லப்படுவதால் பாடலை தவிர விஜய்  படம் முழுக்க ஒரே ஒரு காஸ்ட்யூமில் இருப்பார் என கூறப்படுகிறது.