தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் போதும் அங்கு கும்பலுக்கும் கூச்சல் சத்ததீற்க்கும் பஞ்சமே இருக்காது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் தற்சமயம் நெல்சன் திலீப்குமார் அவர்களுடைய இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்த வகையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் இந்த திரைப்படத்திற்கான சண்டைக்காட்சிகள் அன்பறிவு இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத் திரைப்படத்தின் போஸ்டர் ஆனது வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி யை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அன்றுதான் பூஜாவின் பிறந்தநாள். இந்நிலையில் பூஜா ஹெக்டே அரபு ஷேக்குகள் உடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்க்கும்போது இத்திரைப்படத்தில் அரபு ஸ்டைலில் ஒரு பாடல் அமைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்புகைப்படம் அதனை உறுதி செய்துள்ளது.