பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கேஜிஎப் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் அவசரம் அவசரமாக எடுக்கப்பட்டது இந்த படம் முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தடைகளை சந்தித்ததால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வழியாக ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என சொல்லிவிட்டது.
இதையடுத்து ஏப்ரல் 14 தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. படம் வெளிவர இன்னும் கொஞ்ச நாட்களிலேயே இருக்கின்ற நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டை கொடுத்த வருகிறது அந்த வகையில் நேற்று கேஜிஎப் 2 திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு அசத்தியது. இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் யாஷ் விஜய்யின் பீஸ்ட் படம் குறித்தும் விஜய் குறித்து பேசியுள்ளார்.
கேஜிஎப், பீஸ்ட் இரண்டு முக்கிய திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசாகிறது என கேள்வி கேட்க இதற்கு பதிலளித்த யாஷ். இது தேர்தல் கிடையாது தேர்தல் என்றால் அனைவரிடத்திலும் ஒரே ஒரு ஒட்டு இருக்கும் அந்த ஒட்டு யாருக்கு என்பதற்காக சண்டை போட வேண்டும் ஒருவர் ஜெயித்தால் மற்றவர் ஒருவர் தோற்க வேண்டும். இது சினிமா அவர் படமும் பார்க்கலாம் என் படமும் பார்க்கலாம் என்றார் மேலும் பல்வேறு கேள்வி பதில் அளித்தார்.
விஜயை ஒரு மூத்த நடிகர் அவரது திரைப் படத்தை ரசிகர்கள் பார்க்கவேண்டும் இணையதளத்தில் பல மோதல்கள் வந்து கொண்டிருக்கிறது இந்த மோதலை யாரும் பண்ண வேண்டாம் என்றார். விஜய் படத்தை அவரது ரசிகர்கள் பார்ப்பார்கள் அவரது ரசிகர் KGF படமும் மபிடிக்கும் எல்லோருக்கும் இரண்டு படத்தை பார்க்கணும் நானும் பீஸ்ட் படத்தைப் பார்க்கிறேன் என்றார்.
கேஜிஎப் திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படம் என்பதால் நாங்கள் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்துவிட்டோம் அதன்பின் விஜயின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாளில் வருவதால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடப் போகிறார்கள் என கூறி அசத்தினார்.