சென்னையில் முதல் காட்சி முதல் ஷோவை பார்க்க சென்ற பூஜா ஹெக்டே, பிரியங்கா மோகன், அனிருத், நெல்சன்.! வைரலாகும் வீடியோ

beast review
beast review

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள beast திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் முதல் காட்சி முதல் ஷோவை பலரும் கண்டு கழித்து வருகிறார்கள்.

மேலும் சமூக வலைதளத்திலும் விமர்சனங்கள் நல்லபடியாக தான் வந்து கொண்டிருக்கிறது. திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதேபோல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே அரபிக் குத்து பாடல் அனிருத் இசையில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது மட்டுமில்லாமல் மொழி கடந்து பல சாதனைகளையும் படைத்தது.

இந்தநிலையில் திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களின் கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன பல பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிகாலை காட்சி இருக்கும் அந்த வகையில் விஜய் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி இன்று அதிகாலையில் திரையிடப்பட்டது.

இந்த அதிகாலை காட்சியை பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டு களிக்கிறார்கள் அந்த வகையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, பிரியங்கா மோகன், அணிருத், நெல்சன்  ஆகியோர் இந்த திரைப்படத்தை அதிகாலை காட்சியை கண்டுள்ளார். அதன் வீடியோ இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் யோகி பாபு அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.