விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. விஜய் படம் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருக்கும் அந்த வகையில் இந்த பீஸ்ட் திரைப்படத்தில் வேண்டுமென்றே ஹிந்தி மொழி தொடர்பான வசனம் வைத்துள்ளதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
படத்தை ஓட வைப்பதற்காக தான் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை திணித்து வருகிறார்கள் என பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள் விஜய் படம் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் இருந்து வருகிறது என்பது தொடர்கதையாகி விட்டது அதனால் படத்திற்கு பெரும் பப்ளிசிட்டி கிடைத்துவிடுகிறது. ஒருவேளை பப்ளிசிட்டிக்காக தான் இதுபோல் விஷயங்களை படங்களில் திணிக்கிறார்களோ என்னவோ என தோன்றுகிறது.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பொழுது படத்தில் பயங்கரவாதிகளை முஸ்லிம்களாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது அது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது.காஷ்மீரில் தீவிரவாதிகள் இடம் பேசும் விஜய் உனக்கு ஒவ்வொரு முறையும் இந்தியில் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது உனக்கு வேண்டுமென்றால் தமிழ் கற்றுக் கொண்டு வா என பேசுகிறார்.
ஏற்கனவே ஹிந்தி திணிப்பு என்ற சர்ச்சையான விஷயம் ஒன்று தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்பொழுது ஹிந்தியை எதிர்ப்பது போன்ற வசனத்தை இந்த திரைப்படத்தில் திணித்து இருப்பதாக தெரிகிறது இந்த வசனம் ட்ரெண்டாகும் அதேசமயம் தேவையில்லாமல் சர்ச்சையையும் உண்டாகும். இதுபோல் வசனங்கள் விஜய் படத்தில் இருப்பது புதிதல்ல இதற்கு முன் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி பேசினார்.
அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனைத் தொடர்ந்து சர்க்கார் திரைப்படத்திலும் அரசு நலத்திட்ட உதவிகளை தூக்கி எரிவது மாதிரி காட்சிகள் இருந்தது அதே போல் கத்தி திரைப்படத்திலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வசனம் இருந்தது இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். எதிர்கால அரசியல் கனவில் இருக்கும் விஜய் பொதுமக்கள் மற்றும் பொது பிரச்சனைக்கு நேரடியாக குரல் கொடுக்காமல் பட ஆடியோ விழாவில் ஏதாவது கூறி பரபரப்பாக பேசி அதையே பப்ளிசிட்டி செய்து கொண்டு படத்தை ஓட்டி விடுகிறார் என பெரும் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இது கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது எனவும் படத்திற்காக கல்லா கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை பலரும் பார்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற செயல்களில் ரஜினி ஈடுபட்டு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் தற்போது விஜய்யும் அதே ஸ்டைலில் ஈடுபட்டு வருகிறார் என பெரும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.