தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியாகிய அரபி குத்து பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ரசிகர்களிடம்.
திரும்பிய இடமெல்லாம் அரபிக் குத்து ஒன்று ஒலித்தது யாரைப் பார்த்தாலும் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார்கள் இதில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியானது இந்த பாடலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் அதேபோல் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் யூடியூபில் சாதனைகளையும் நிகழ்கிறது. 13ஆம் தேதி வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என பலரும் கூறி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட பண்டிகை நாட்களை போல் கல்லா கட்டும் என காத்திருக்கிறார்கள் இந்த நிலையில் திரையரங்க வசூல் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 175 கோடி எனவும் அதில் விஜய்யின் சம்பளம் என்பது கோடி எனவும் நெல்சன் அவர்களுக்கு 8 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு 4 கோடி சம்பளம், பூஜா ஹெக்டே சம்பளம் ரூ 2 கோடி என இப்படி இதர நடிகர்களின் சம்பளம் என அனைத்தும் சேர்த்து 100 கோடி ரூபாய் சம்பளம் போய்விட்டது மீதமுள்ள 75 கோடி மட்டுமே பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கம் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமை 75 கோடிக்கும் கேரள திரையரங்க உரிமம் 6 கோடிக்கும் கர்நாடக திரையரங்க உரிமை 6.30 கோடிக்கும் தெலுங்கு திரையரங்கு உரிமை 6 கோடி ஹிந்தி திரையரங்க உரிமை 2 கோடி என பெற்றுள்ளது.
இதனைத் தவிர்த்து சேட்டிலைட் உரிமம் அதாவது தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சியே எடுத்துக் கொள்வதால் அதற்கு 40 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து OTT நிறுவனமான நெட் பிலிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் அதனால் இதற்கு தொகையாக 50 கோடி எனவும். ஆடியோ உரிமம் 5 கோடி எனவும் நிர்ணயம் செய்துள்ளது.
இப்படி படத்தின் ரிலீஸ்க்கு முன்பே பல கோடி லாபத்தை பார்த்த பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன பிறகு எவ்வளவு லாபம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.