வடை எல்லாம் சுடல தம்பிகளா இதுதான் நிஜம்.! பீஸ்ட் கலெக்சன் பற்றி பிரபல தயாரிப்பாளர் ட்வீட்.!

beast movie collection
beast movie collection

தளபதி விஜய் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் வசூலில் பாதிப்பு ஏற்படும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நேற்று வெளியாகிய கேஜிஎப் இரண்டாவது பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பலரும் கேஜிஎப் திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதனால் பீஸ்ட் திரையிடப்பட்ட திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக கேஜிஎப் திரைப்படத்தை திரையிட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது பிரபல சினிமா பிரபலமான தனஞ்செழியன் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் பேட்டி அளித்தது போல் பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் கலெக்ஷனில் அனைத்து சாதனைகளையும் தகர்த்து எறிந்தது.

இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் புகழ் தான் அது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ கலெக்ஷன் விவரத்தை வெளியிடும் எனவும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் வடை எல்லாம் சுடலை தம்பிகளா நிஜம் எனவும் பதிவிட்டுள்ளார்.

இவர் பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.