இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு 65வது திரைப்படம் ஆகும் இந்த படமும் ஆக்ஷன், காமெடி கலந்த திரைப்படமாக உருவானது. நிச்சயம் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என படக்குழு நினைத்தது.
ஆனால் இந்த படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஒண்ணுமே பொருந்தாமல் போனதால் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளி வந்தன. முதல் நாளில் 33 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்த நாளில் 18 கோடி தான் தமிழகத்தில் வசூல் செய்தது.
இப்படி நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே போனதால் போட்ட பணத்தை பீஸ்ட் படமெடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது ஆனால் தற்போது பொதுமக்கள் இந்த படத்தை பார்க்க தொடங்கி உள்ளதால் இந்த திரைப்படம் வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே சுமார் 200 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளிவந்து 5 நாட்களில் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் இந்த வசூல் பற்றிய தகவலை திருப்பூர் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது மேலும் விடுமுறை தினங்கள் முடிந்த போதிலும் இன்றும் கூட ரசிகர்கள் வரவேற்பு திரையரங்கில் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.
இதனால் மிக குறுகிய காலத்திலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் இந்த படமும் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பது தற்போது தெரிய வருகிறது.