நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது படத்தை விஜய்க்காக தான் பார்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர்களும் நடித்திருந்தார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தில் கதையில் லாஜிக் இல்லை என்றும் பல லாஜிக் மீறல்கள் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நெல்சன் அவர்களுக்கு படத்தை இயக்க போதிய அவகாசம் கொடுக்கவில்லை தயாரிப்பு நிறுவனம் என பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திரைக்கதையில் தொய்வு இருப்பதாகவும் விஜய் மட்டும்தான் படத்தில் மாஸ் காட்டியுள்ளார் என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள். பொதுவாக ஒரு திரைப்படம் வந்தாலே பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ப்ளூ சட்டை மாறன் எந்த திரைப்படம் வந்தாலும் அதனை பங்கமாய் கலாய்த்து விமர்சனம் செய்வார்.
அந்தவகையில் பீஸ்ட் திரைப்படத்தையும் பங்கமாய் விமர்சனம் செய்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பீஸ்ட் படத்தை ட்ரோல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது ஷாப்பிங் மால் செல்பவர்கள் கொண்டாடும் படம் என பதிவு செய்துள்ளார்.
இந்த மீம்ஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதற்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள் ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 13, 2022