தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்திலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளார்கள் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கு பஞ்சமே இருக்காது.
இவ்வாறு தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இத்திரைப்படத்தை பிரபல கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தின் டைட்டில் பீஸ்ட் என பெயரிட்டு அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மிக பிரம்மாண்டமாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இத் திரைப்படமானது கூர்க்கா திரைப்படம் போலவே இருக்கும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
ஏற்கனவே யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படம் ஆனது ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தற்போது தளபதி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்திலும் மால் போன்ற செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட வதந்தி கிளம்பி உள்ளன.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே நெல்சன் திலிப்குமர் அவர்கள் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படமானது வி ஆர் டி மில்லர்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தளபதி யை வைத்து எடுக்கும் இத்திரைப்படமும் காப்பியாக இருக்க அதிக சான்ஸ் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
என்னதான் இப்பொழுது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு வதந்திகள் உலாவினாலும் திரைப்படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் இந்த திரைப்படம் காப்பியா இல்லை நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமா என்பது.