நடிகை பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா உலகில் நடிக்க களமிறங்கியுள்ளார். அதுவும் எடுத்தவுடனேயே இப்பொழுது தளபதி விஜய்யுடன் இவர் கைகோர்த்து பீஸ்ட் படத்தில் ஹீரோயின்னாக நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் முற்றிலுமாக முடிந்த நிலையில் ஒரு வழியாக பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து சில அப்டேட்டை கொடுத்துள்ளது அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அரபி குத்து பாடல் ஆகியவை வெளிவந்துள்ளன இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் ராதேஷ்யாம், ஆச்சாரியா, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்து வந்தார். சொல்லப்போனால் பீஸ்ட திரைப்படத்தை தொடர்ந்து வெகு விரைவிலேயே ராதே ஷியாம் திரைப்படமும் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்று நீங்கள் ராதேஷ்யாம் படப்பிடிப்பு ஷூட்டிங்கின் போது உங்களுக்கும் பிரபாஸ் -க்கும் இடையே சண்டை நேர்ந்ததா என கேட்டனர். பூஜா சூட்டிங்கிற்கு தாமதமாக வந்ததால் பிரபாஸ் திட்டினார் என்றும் அதனால் இருவருக்கும் இடையே சண்டை என நிலவுவதாக தகவல்கள் பரவியது.
ஆனால் தயாரிப்பாளர் அதை மறுத்தார் இருப்பினும் இச்செய்தி வலம் வந்தது இதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டனர். பூஜா ஹெக்டே எங்கள் இருக்கும் இடையே எந்த பிரச்சனை இல்லை. அர்த்தமற்ற செய்தி பிரபாஸ் ரொம்ப இனிமையானவர் என பாராட்டி இருக்கிறார்.