தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் பல நடிகைகள் பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பறக்க விட்டு வருகிறார்கள் அந்த வகையில் முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் இதை பின்பற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இளைய தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகைதான் பூஜா ஹெக்டே இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து பெரிதாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை இருந்தாலும் தெலுங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜாவுக்கு ஹிந்தியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் தமிழில் தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரின் படபிடிப்பை நேற்று முடித்துவிட்டதாக சமூக வளைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்பொழுது கருப்பு நிற புடவையில் கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் ஹிந்தியில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி ஹவுஸ்ஃபுல் திரைப்படம் கோடி கோடியாக கொட்டியது.
அதேபோல் தெலுங்கிலும் இவர் நடித்த அல வைகுண்டபுரமுலு நல்ல வரவேற்பைப் பெற்றது. வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் கருப்பு நிற புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் இதொ அந்த புகைப்படம்.