சினிமா உலகில் திறமையை காட்டும் பிரபலங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அசுர வளர்ச்சியை எட்ட முடியும் அதற்கு உதாரணமாக இப்பொழுது நாம் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாரையே சொல்லலாம். முதலில் சின்னத்திரையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றி பின் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார்.
முதலில் யோகி பாபு, நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை எடுத்திருந்தார் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் படத்தை எடுத்திருந்தார் இந்த படம் ஆக்ஷன், காமெடி கலந்த படமாக உருவாகிறது.
படம் முழுக்க முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டடித்தது மேலும் இந்த படம் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது விஜய்க்கு கதை சொல்லி பீஸ்ட் படத்தை எடுத்துள்ளார் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி உலக அளவில் பெரிதாக இருக்கிறது.
இந்த படத்திலிருந்து பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில் அடுத்ததாக டிரைலர் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தனது அப்பா குறித்து அவர் பேசி உள்ளார் இயக்குனர் நெல்சன். நானும் என்னுடைய அப்பாவும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் எப்பொழுதெல்லாம் விஜய் படம் வருகிறதோ அதை பார்த்து நாங்கள் கொண்டாடுவோம்.
ஆனால் அண்மையில் எனது அப்பா இறந்து விட்டார் நான் சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் என்னும் திரைப்படத்தை எடுத்து இருந்தேன் அந்த திரைப்படத்தை கூட எனது அப்பா பார்க்கவில்லை அதற்கு முன்பு இறந்துவிட்டார். இப்போ அவருடைய ஆசை நாயகன் விஜயை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்துள்ளேன் இந்த படம் வெளிவர இருக்கிறது நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும்.
என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இந்த படத்தை எனது அப்பா பார்த்து இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் ஆனால் பார்க்க கொடுத்துவைக்கவில்லை இருப்பினும் எனது வளர்ச்சியை அவர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என உருக்கமாக பேசினார். நெல்சன் ரஜினியின் 169 திரைப்படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.