டல்லடிக்கும் பீஸ்ட்.? மாஸ் காட்டும் கே ஜி எஃப் 2.? இதுவரை அள்ளிய மொத்த வசூல் நிலவரம்.!

kgf-and-beast-
kgf-and-beast-

சினிமா உலகில் சிறப்பான கதைகள் உள்ள படம் எப்போதுமே வெற்றியை ருசிக்கும் தன் சொந்த மொழியையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தாலும் அந்த வகையில் இளம் இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் யாஷை வைத்து கேஜிஎப் இன்னும் தங்க வேட்டை நடத்தும் படத்தை எடுத்தார்.

முதல் படம் சூப்பராக இருந்ததை தொடர்ந்து அடுத்த பாகம் எடுக்க பட்டது அந்த படமும் ஒரு வழியாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதுவரை இந்தத் திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் 2.0, பாகுபலி போன்ற படங்களின் சாதனையை தகர்த்தெறிந்து ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருவதால் கேஜிஎப் 2 நிச்சயம் இன்னும் பல கோடிகளை அள்ளும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த படத்திற்கு முன்பாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டாலும் கேஜிஎப் 2 தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது காரணம் இந்த படத்தில் ஒவ்வொரு சீனும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார தான் பார்க்கின்றனர் அந்த அளவிற்கு இருந்தது ஆனால் பீஸ்ட் திரைப்படம் அதை செய்ய தவறியது.

இதனால் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை 210 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டு படங்களும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெளிவந்தாலும் இந்த ரேசில் கேஜிஎப் திரைப்படம் தான் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது பீஸ்ட் திரைபடம் சுமாரான வசூலை அள்ளி இருந்தாலும் விஜய் ரேஞ்சுக்கு இந்த வசூல் கம்மி என கூறி வருகின்றனர்.