தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் புரமோஷனில் சன் பிக்சர் நிறுவனத்தை அடித்துக் கொள்ள ஆளில்லை அந்த அளவு படுபயங்கரமாக ப்ரோமோஷன் செய்வார்கள்.
அப்படித்தான் பீஸ்ட் திரைப்படத்திற்கும் புரோமோஷன் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன் யோகிபாபு அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் முதலில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் என படக்குழு பிளான் செய்தது.
ஆனால் அன்றைய தினத்தில் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியாக இருப்பதால் வசூலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிந்து கொண்டு அதற்கு முந்தைய தினமான ஏப்ரல் 13ம் தேதி திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கேஜிஎப் முதல் பாகம் பிரசாந்த் நீல அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ம் தேதி வெளிவருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ஆனாலும் விஜயின் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாவதால் இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ஆனால் 2 திரைப்படத்தில் எந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேஜிஎப் திரைப்படம் வெளியாவதால் பல திரைப்படங்கள் ரேஸில் இருந்து விலகிக் கொண்டன ஆனால் பீஸ்ட் திரைப்படம் மட்டும் மிகவும் கெத்தாக ரிலீஸ் செய்வது படக்குழுவுக்கும் விஜய்க்கும் தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒத்தைக்கு ஒத்தையாக விஜய் தில்லாக மோதுகிறார் எனவும்கூறி வருகிறார்கள்.