100 நாள் ஷூட்டிங் எடுத்து அசத்திய “பீஸ்ட்” படக்குழு – நடிகர், நடிகைகள் கொண்டாட்டம்.! இணைய தளத்தில் பரவும் புகைப்படம்

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் அந்த வகையில் முதலாவதாக நெல்சன் திலிப்குமார் உடன் கைகோர்த்தது “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஆரம்பத்திலேயே வெளியாகியது அதை தொடர்ந்து மறைத்து வைக்க படக்குழு என்ன தான் மூடி மறைத்தாலும் இந்த படத்தில் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவை கசிந்த வண்ணம் இருப்பதால் விஜய் ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதுவரை பீஸ்ட் திரைப்படம் 75% முடிவடைந்ததாக கூறப்படுகிறது தற்போது படக்குழு கேரளாவில் படப்பிடிப்பை நடத்தி வந்ததாக செய்திகள் வெளிவருகின்றன. இதை கையோடு ஜார்ஜியா சென்று மீதி கட்ட படப்பிடிப்புகளை எடுக்க இருப்பதாக தெரிய வருகிறது. இந்த திரைப்படம் மிக விரைவாக முடித்து விட்டாலும் அடுத்த வருடம் கோடை மாதங்களில் தான் வெளியாகும் என தெரியவருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் படப்பிடிப்புத்திலிருந்து ஒரு புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. மேலும் ஒரு தகவலும் வெளியாகி உள்ளது அதாவது பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் சூட்டிங் முடிந்ததாகவும் அதன் ஸ்பெஷலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள். அந்த புகைப்படத்தில் அபர்ண தாஸ், பூஜா ஹெக்டே, நெல்சன் டிலிப்குமர் தளபதி விஜய் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

beast
beast