சினிமா உலகில் காமெடி படங்களை எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டு வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய காமெடி படங்களை எடுத்து வந்த நிலையில் முதன்முறையாக தளபதி விஜய்யை வைத்து “பீஸ்ட்” என்னும் ஆக்சன் திரைப்படத்தை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பத்தில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவை சுற்றி தான் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் படமாக்கப் பட்ட நிலையில் தற்போது கேரளாவில் ஷூட்டிங் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விவிடி கணேஷ், யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடுகிறதோ இல்லையோ சுற்றியிருக்கும் பிரபலங்களும் அல்லது இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களோ இந்த படத்தின் அப்டேட்டை மறைமுகமாக வெளியீட்டு கொண்டுதான் வருகின்றனர். சமீபத்தில் கூட டெல்லியில் ஒரு மாலில் ஷூட்டிங் நடைபெற்றது அப்போது விஜய் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் வெளியாகியது.
மேலும் சமீபத்தில் கூட விஜய் மாலில் ரத்தக்கறையுடன் நிற்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது இதை அறிந்த தயாரிப்பாளர் உடனடியாக நெல்சன் அழைத்து நீங்கள் இவ்வாறு படம் வெளிவருவதற்கு முன்பு ஒவ்வொரு காட்சிகளாக வெளியிட்டுக் கொண்டே இருந்தால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவதோடு நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
இதனால் செம கடுப்பாகி விட்டார் இயக்குனர். சூட்டிங் நடைபெறும் இடத்தில் இருக்கும் அனைவருக்கும் பல கட்டுப்பாடுகளை கொடுத்து போன்களையும், கேமராக்களையும் கையில் எடுக்கக்கூடாது. இனி எந்த ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாக கூடாது என அதிரடியாக கூறியுள்ளாராம் மேலும் சற்று கோபத்தில் தான் நெல்சன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.