பீஸ்ட் கிளைமாக்ஸ் காட்சியில் முக்கிய காட்சியை வெட்டி எறிந்த நெல்சன்.! ரசிகர்கள் அதிர்ச்சி.!

beast movie
beast movie

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம்  பீஸ்ட் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகிய இந்த திரைப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி படக்குழு திரையரங்கில் வெளியிட்டது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியது. படத்தில் தளபதி விஜய் ரா ஏஜென்டாக பணியாற்றி நடித்துள்ளார்  மேலும்விஜய் மனோதத்துவ நிபுணர் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் விடிவி கணேஷ் செக்யூரிட்டி ஏஜென்சி மூலமாக மால் ஒன்றிற்கு செல்கிறார் அங்கு  தீவிரவாதிகள் மாலை கைப்பற்றி வைத்துள்ளார்கள் அந்த தீவிரவாதிகளை எப்படி விஜய் ஒழித்து கட்டுகிறார் அதிலிருந்து எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களை காப்பாற்றி கிளைமேக்ஸ் காட்சியில்  பாகிஸ்தான் தீவிரவாதி முகாமுக்குள் புகுந்து வில்லனை இந்தியாவிற்கு கொண்டு வரும் காட்சிகள் படத்தில் மாஸ் காட்டியுள்ளது அதுமட்டுமில்லாமல் உண்மையில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் எப்படி தீவிரவாத முகாமை கண்டுபிடிக்கிறார் அங்கு எப்படி சென்று டிரெய்னிங் பெறுவதற்கு சேருகிறார் என்பது மிகப்பெரிய காட்சிகளாக இருந்தது அதுமட்டுமில்லாமல் இந்த காட்சிகள் மிகவும் பிரமாதமாக இருந்ததாக கூறப்படுகிறது அந்தவகையில் படத்தின்  நிலத்திற்காக படத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த காட்சிகளை நெல்சன் நீக்கியுள்ளார்.

அந்த காட்சியின் ஸ்டோரி போர்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.