தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அதாவது ஏப்ரல் மாதம் திரையிட படக்குழு முடிவு எடுத்துள்ளது. மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பாடலை காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அரபி குத்து பாடல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.மேலும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.
இந்த அரபு குத்து பாடலுக்கு பல ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்,நடிகை சமந்தா,இயக்குனர் அட்லி, ஜோனிட காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன், திவ்யபாரதி, அஞ்சனா,கீர்த்தி சுரேஷ் யுவன் சங்கர் ராஜா,என பலரும் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரி மிகவும் அற்புதமாக இருந்தது என விஜய் கூறியதாக ஒரு மேடையில் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார் இந்த நிலையில் இவர்களை தொடர்ந்து தற்போது கோமாளி பட நடிகை சம்யுக்தா தன்னுடைய நண்பர்களுடன் பீஸ்ட் படத்தின் பாடலான அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்