தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் இரண்டாவது பாகம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இரண்டு திரைபடதிர்க்குமே எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகள் இருக்கின்றன இந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பீஸ்ட் ரிலீஸ் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு 200 முதல் 250 திரையரங்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்க்கு முன் வெளியாகிய அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்திற்கு ஆயிரம் திரையரங்குகளில் வெளியானதும் வலிமை திரைப்படம் சோலோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
கேஜிஎப் திரைப்படமும் பீஸ்ட் திரைப்படமும் நேருக்கு நேர் மோத இருப்பதால் எந்த திரைப்படம் எவ்வளவு வசூல் பெரும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.