ரவுடி ராக்கி பாய்க்கு வழியை விட்டு விட்டாரா… ‘ரா’ அதிகாரியான வீரராகவன்.?

kgf beast
kgf beast

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் விஜய் இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதேபோல் நாளை கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வந்தால் வேறு திரைப் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் அதனை அவ்வளவாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்களை தான் கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்துடன் கேஜிஎப் திரைப்படம் மோத இருக்கிறது. இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை பீஸ்ட் திரைப்படத்துடன் கேஜிஎப் திரைப்படம் அதாவது கனட டப்பிங் திரைப்படம் போட்டி போடுவதா என விஜய் ரசிகர்கள் பலரும் கேஜிஎப் 2 திரைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகர் யாஷ் இது போட்டி அல்ல இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள் என கூறியுள்ளார்.  இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படம் இன்ற வெளியாகியுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளார்கள் இந்த நிலையில் நாளை முதல் கேஜிஎப் திரைப்படம் திரையிடப்படுகிறது அதனால் பீஸ்ட் திரைப்படத்தை மிக எளிதாக சமாளித்து விடும் கேஜிஎப் திரைப்படம் எனக் கூறுகிறார்கள்.

தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு தானாகவே வரவேற்பு கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒரு சில பிரபலங்கள் பீஸ்ட் கதாநாயகனான ரா அதிகாரியான வீரராகவன் கே ஜி எஃப் 2 ரவுடி ராக்கி பாய்க்கு எளிதாக வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாரா என பலரும் திரையுலகில் பேச்சு பொருளாக பேசி வருகிறார்கள்.