சும்மா அனல் பறக்க வெளியானது பீஸ்ட் மூன்றாவது சிங்கிள் டிராக்.! Meaner, leaner, stronger Can you feel the power

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறது. படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் மிகவும் பயங்கரமாக பணியாற்றி வருகிறார்கள்.

பீஸ்ட் திரைப்படத்திலிருந்து முதலில் வெளியாகி அரபி குத்து பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதனைத்தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் யூடியூபில் சில சாதனைகளையும் நிகழ்த்தியது.

இந்த நிலையில் பீஸ்ட் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் ட்ராக்கை  வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது அதேபோல் தற்போது மூன்றாவது சிங்கிள் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சும்மா அனல் பரக்க Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire என்ற பாடல் வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது இந்தப் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அனிருத் இசையில் வெளியாகிய இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.