பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியானது ஜாலியோ ஜிம்கானா.! வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விடிவி கணேஷ், யோகிபாபு செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சிங்கிள் டிராக் வெளியானது இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் அவர்கள்தான் எழுதியிருந்தார் அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிட காந்தி இணைந்து பாடியிருந்தார்.

இந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடும் வீடியோவை வெளியிட்டார்கள் அந்த வகையில் சமந்தா, பூஜா ஹெக்டே ராஷ்மிகா மந்தனா என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் இன்று 2வது சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார் மேலும் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் விஜய், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு இடம் பெற்றிருந்தார்கள். மேலும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கான செகண்ட் ப்ரோமோ வெளியானது மேலும் இந்த ப்ரோமோவில் பனிப்பிரதேசத்தில் நடனமாடுவது போல் காட்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாடலை எழுதியது கார்த்தி ஜாலியோ ஜிம்கானா குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும் அது நடந்தது நடந்ததுதான் அதனை நம்மால் மாற்ற முடியாது அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டு விட்டு நாம் போய்க் கொண்டே இருக்கணும் என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும் என்பதுதான் கருத்து எனக் கூறியுள்ளார்.