தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கம் தயாரிப்பு என பல்வேறு துறையிலும் தன்னுடைய திறமையை வெளி காட்டியவர் ஆவர். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நடிகர் கமல் அரசியலிலும் மிக தீவிரமாக இறங்கி விளையாடி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நேற்று பல்வேறு திரையரங்கில் வெளியாகி மிக மிகப்பெரிய வெற்றியை சந்தித்து உள்ளது. அந்தவகையில் படம் வெளியான நேரத்தில் இருந்து தியேட்டர்களில் திருவிழா போல ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவ்வாறு வெளிவரும் அப்டேட்கள் மூலமாக மேலும் மேலும் கூட்டங்கள் தியேட்டர் முன்பு கூட்டம் கூடியாது மட்டும் இல்லாமல் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைமோதி வருவதாக தெரியவந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க கடைசி கட்டத்தில் வந்த சூர்யா தியேட்டரையே மிரள வைத்தது மட்டும் இல்லாமல் பல்வேறு விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிக்கும் தகுந்தார்போல் இசையமைப்பாளர் அனிருத் கொடுத்த இசை என்றும் ரசிகர்களை குளிர செய்துள்ளது என்று சொல்லலாம்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளருக்கு ஒளிப்பதிவாளருக்கு பல்வேறு பங்களிப்பு உள்ளதாக பல தரப்பினர்களும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் சேது நந்தா வாரணம் ஆயிரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்தினவேலு அவர்கள் விக்ரம் திரைப்படத்தை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் கமல் சார் அவர்கள் நடிக்கிற எல்லா சிலிண்டறையும் உங்கள் புதிய அவதாரத்தால் வெடிக்க வைத்து விட்டீர்கள். என்று கூறி உள்ளார்கள். அந்த வகையில் இவர் வெளியிட்ட பதிவை பார்த்த நடிகர் கமல் உன்னுடைய சிலிண்டர் ஐயும் பீல் பண்ணி வை கூடிய விரைவில் இரண்டுபேரும் இணைவோம் என்று கூறியுள்ளார்.