லாஸ்லியாவை விட தோழி நல்லயிருக்காங்க.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

losliya

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த பெண் ஆவார். மேலும் இவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழில் பல ரசிகர்கள் உருவாகினர்.

மேலும் இவரது கொஞ்சும் தமிழ் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ரொமேன்ஸ் செய்து ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் செய்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் முதல் படமாக லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் பாடல் கூட அண்மையில் வெளியாகி நல்ல ரீச் அடைந்தது இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் லாஸ்லியா அவரது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் நடிகை லாஸ்லியா அவரது தோழியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போல் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை விட அவரது தோழி அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தற்போது லாஸ்லியாவின் தோழியை பற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் தேடி வருகின்றனர்.

losliya
losliya
losliya