தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணி இந்த இரண்டு அணியும் இறுதி போட்டிக்கு சென்றது அதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பைகளை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்தது. இந்திய அணி 169 ரன்கள் கொண்டிருந்த நிலையில் இந்திய அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி வெறும் 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் இலக்கை எட்டியது.
கோப்பைகளை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி கூட கொடுக்க முடியாமல் போனது. இதனால் இந்திய அணி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக் கோப்பை போட்டியில் செயல்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் மேலும் தடுமாறிய இந்திய அணி வீரர்கள் சரியாக செயல்படவில்லை அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஏடாகூடமாக பேச ஆரம்பித்தனர் அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய அனியின்ன் முன்னாள் கேப்டனான தோணி தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் இந்திய அணியின் மிகப்பெரிய பொறுப்பை தோனிக்கு கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால் அவரது பணி சுமைகள் அதிகமாக உள்ளதாக பிசிசிஐ ஒரு கருத்தை முன் வைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் ஐசிசி போட்டியில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர டி20 அணியில் தோனியை பயிற்சியாளராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி அவர்கள் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தோனி டி20 வடிவத்தில் மட்டும் ஈடுபடுத்த தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தோனி ரசிகர்களுக்கும் ஒரு இன்பம் செய்தியாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க.