கோலியிடம் இருக்கும் கேப்டன் பதிவியை சில காரணங்கள் சொல்லி பிடிங்கும் BCCI – யாருக்கிட்ட கொடுக்க போறாங்க தெரியுமா.?

kohli

இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறது இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் ஐபிஎல் போட்டியும் நடக்க இருப்பதால் அங்கு இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்திய அணியை வழக்கம் போல கேப்டன் கோலி வழி நடத்த இருக்கிறார்.

வைஸ் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு விராட் கோலி தனது கேப்டன்ஷிப்பை பிரித்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விலகி வேறு ஒருவருக்கு அந்த கேப்டன்ஷிப்பை வேறு ஒருவருக்கு கொடுப்பார் என கூறப்படுகிறது காரணம் சமீபகாலமாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த நாளும் பெரும்பாலான தொடரை அவர் வெற்றி பெற்றதில்லை.

மேலும் இதுவரை எந்த ஒரு ஐசிசி தொடரையும் அவர் கைப்பற்றவில்லை இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவருக்கு பின்னால் வந்த ரோகித் தற்பொழுது கேப்டன்னாக சிறப்பாக செயல்படுவதால் அவரை ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் நிரந்தர கேப்டனாக போட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் கோலி வருகிற 20 ஓவர் உலக கோப்பையை வென்று அந்த குறையை நீக்க முடிவெடுத்திருக்கிறார் இது இப்படி இருந்தாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும்படி இதுவரை 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களையும் மற்றும் BCCI -யும்  சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

rohit sharma
rohit sharma

எனவே கோலி கேப்டன்ஷிப் விட்டு தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தினால் அது இந்திய அணிக்கும் அவருக்கும் இன்னும் நல்ல கூடுதல் பலத்தை கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர். கோலியை கூட ரோஹித்  பேட்டிங்கிலும்  லும் சரி மற்றும் கேப்டனாகவும் சரி தனது திறமையை காட்ட கூடியவர். மேலும் ரோகித் சிறப்பாக செயல்படுவார் என தற்போது பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது எனவே கோலியே தனது பதவியை விட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுப்பார் என தெரியவருகிறது.