BCCI போட்ட ரூல்ஸ்.. முதல் மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகும் மும்பை இந்தியன்ஸ் அணி.? அந்த பிளேயர்ஸ் யார் யார் தெரியுமா.? வெளியான நிலவரம்.

mumbai indians
mumbai indians

இந்தியாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் ஐபிஎல் இப்போட்டி 14 சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் துவங்க இருக்கிறது அதற்கு முன்பாகவே வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ தற்போது நேரம் கொடுத்து உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் புதிதாக  இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாட இருக்கின்றன.  இப்படி இருக்கின்ற நிலையில் பிசிசிஐ ஒரு அணி மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்ததை அடுத்து மற்ற வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது இதனை எடுத்து ஐபிஎல் ஓனர்கள் தற்போது யாரை தக்கவைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து வருகின்றனர் .

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி சைடிலிருந்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் மூன்று வீரர்கள் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவதாக கேப்டன் ரோகித் சர்மாவை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஏனென்றால் இவர் இதுவரை 5 முறை கோப்பையை வென்று காட்டியவர்.

போட்டியை துல்லியமாக கணித்து அடுத்து யார் இறக்குவது பில்டிங் கச்சிதமாக செய்வது என எல்லாவற்றிலும் ரோகித் சர்மா அபாயகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தனது கியரை மாற்றி அதிரடியை காட்டக் கூடியவராக இருப்பதால் ரோகித் சர்மாவை முதலில் தக்கவைத்துக் கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

அடுத்ததாக இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ளது இவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எதிரணியை நடுநடுங்க செய்வதோடு ரன் வேட்டையை கட்டுப்படுத்த கூடியவராக இருக்கிறார் மேலும் ஆரம்பத்தில் 2 ஓவர், கடைசி 2 ஓவர் சிறப்பாக வீசி வருவதால் இவரை அடுத்ததாக தக்கவைத்துள்ளது. மூன்றாவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பொல்லார்ட் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விஸ்வரூபம் காட்டக் கூடியவர் ஒரு இலக்கை எட்ட முடியாது என்று நாம் தீர்மானித்த போது அதையும் எட்ட முடியும் என சாதித்து காட்ட கூடியவர்தான் பொல்லார்ட் எனவே அவரை மூன்றாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த மூன்று பேரை தவிர மற்றவர்களை ஏலத்தில் விட்டு பின் படிப்படியாக தடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி பிளான் போட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.