இந்திய கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை நாம் அவ்வளவு தெரிந்து இருக்க மாட்டோம். அவை இப்போது புள்ளி விவரமாக BCCI திறமையான வீரர்களை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு A+, A, B,C என கிரேடு களை அமைத்து சம்பளத்தை வாரி வழங்குகிறார்கள்.
A+ வைத்திருக்கும் வீரர்களுக்கு 7 கோடி காண்ட்ராக்ட் பேசப்பட்டுள்ளது. A வைத்திருக்கும் வீரர்களுக்கு 5 கோடியே காண்ட்ராக்ட் பேசப்பட்டுள்ளது அதுபோல B வைத்து இருப்பவர்களுக்கு 3 கோடி பேசப்பட்டுள்ளது.
மேலும் கடைசியாக C வைத்திருப்பவர்களுக்கு ஒரு கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது ஆனால் தற்போது இந்தப் பட்டியலில் ஒரு சிலர் மாறியும் உள்ளனர்.அந்த வகையில் C கிரெட்டுக்கு புதிதாக சுமன் கில், சிராஜ், அக்ஷர் பட்டேல் ஆகிய மூவரும் இந்த இடத்தில் பிடித்துள்ளனர்.
மேலும் C கிரெட்டில் இருந்து மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் வெளியேறி உள்ளனர். மற்ற ஒரு சில வீரர்கள் கிரேடு முன்னேற்றமும், சரிவையும் சந்தித்துள்ளனர். 2020 – 2021 அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லிஸ்ட் இதோ.
A+ ல் ரோஹித் சர்மா, விராட், பும்ரா ஆகியோர் இருகின்றனர். A வில் கேஎல் ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, முகமத் சாமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.
B ல் மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார், தாகூர், விருத்திமான் சாஹா உமேஷ் யாதவ்இடம் பிடித்து உள்ளனர். C கிரேட்டில் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், அக்ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமான் விகாரி, சாஹல், குல்தீப் யாதவ் சைனி ஆகியோர் இந்த இடத்தை பிடித்துள்ளனர்.