விஜய் டிவியில் மக்களின் பொழுது போக்கிற்காக வாரத்தின் இறுதி நாட்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன அதில் காமெடி நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல ரியாலிட்டி ஷோ களையும் நடத்துகின்றனர். ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 சீசன் சீசனாக நடைபெற்றது இதில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் இணைந்து தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள்.
இதையடுத்து சென்றாண்டு பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் ஜோடியாக இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பங்கேற்றனர்.
தொகுப்பாளராக மகேஷ் மற்றும் தீனா கலந்து கொண்டனர். இந்த சீசனில் போட்டியாளர்களாக வனிதா கலந்துகொண்டார் அவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தியும் இணைந்தார் ஒருகட்டத்தில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் வனிதாவிற்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் வனிதா இந்த நிகழ்ச்சியிலிருந்து இடையிலே வெளியேறினார்.
அதை அடுத்து பிபி ஜோடிகள் சீசன் ஒன்றில் முதலிடத்தை அனிதா மற்றும் ஷாரிக் பிடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பிபி ஜோடிகள் சீசன்2 ஒளிபரப்பாக உள்ளது இதில் பல பிரபலங்களும் ஜோடிகளாக கலந்துகொள்ள உள்ளனர். அதில் பிரியங்கா மற்றும் ராஜு, அமீர் பாவணி, அபிஷேக் மதுமிதா போன்ற பலரும் இணைய உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர் யாராக இருப்பார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது அதன்படி முதல் சீசனில் நடுவராக கலந்துகொண்ட ரம்யாகிருஷ்ணன் இரண்டாவது சீசனிலும் நடுவராக கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது மேலும் மற்றொரு நடுவர் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் நடிகரும் நடன இயக்குனருமான சதீஷ் இதில் நடுவராக கலந்து கொள்கிறார் என கூறப்படுகிறது