மகாலட்சுமியை திருமணம் செய்த நேரம் ரவீந்தர் கம்பி எண்ணுகிறார்.. உண்மைகளை உடைத்த பிரபலம்

mahalakshmi
mahalakshmi

Ravinder Chandrasekar: மோசடி புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாலாஜி என்பவர் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். எனவே விசாரணையில் ரவீந்திரன் பணம் ஏமாற்றியது உண்மைதான் என தெரிய வர உடனே கைது செய்துள்ளனர்.

எனவே இது குறித்து பதில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் சொந்த காசில் இரண்டு, மூன்று படங்களை எடுத்தார் ஆனால் எந்த படமும் ஓடாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது அதன் பிறகு யாருக்குமே தெரியாமல் பெரிய மோசடி செய்துள்ளார். இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் ரவீந்திர சந்திரசேகர். பலகோடி மோசடி செய்துள்ளார் மோசடி குறித்து வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவீந்திரன் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தனை தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

மேலும் ரவீந்திர சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி பெயருக்கு ஏற்றார் போல் உண்மையிலேயே மகாலட்சுமி மாதிரி இருப்பார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு சீரியல் நடித்து வந்தார். அப்பொழுதுதான் திருமணமான ஒருவரை திருமணம் செய்து அது பெரிய பஞ்சாயத்து ஆகி அதிலிருந்து மீண்டு வந்தார்.

இந்த நேரத்தில் தான் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரன் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரே வருஷத்திலேயே கணவர் கம்பி என்கின்றார் .வீட்டுக்கு மகாலட்சுமி மருமகளாக வந்து இருக்காளே என்று நினைச்சா ஒரு வருஷத்திலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டாளு என்று அவரது குடும்பத்தினர் புலம்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.