பிக்பாஸ் வீட்டில் இப்படி எல்லாம் நடக்குது.? கிழி கிழின்னு கிழித்த பயில்வான் ரங்கநாதன்.. கடைசில் சொன்னது தான் டாப்

Biggboss 7
Biggboss 7

Bayilvan Ranganathan : மக்கள் மத்தியில் பேமஸான தொலைக்காட்சியாக வலம் வருவது விஜய் டிவி. இதில் சீரியல்களுக்கு எவ்வளவு இம்பார்டன்ட் கொடுக்கிறதோ அதே போல ரியாலிட்டி ஷோக்களையும் சிறப்பாக நடத்தியும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது.

அந்த வகையில் குக் வித் கோமாளியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக  நடைபெற்று வருகிறது.  இதுவரை 6 சீசன் முடிந்த நிலையில் ஏழாவது சீசன் வெகு விரைவிலேயே தொடங்க விடய இருக்கிறது. இந்த சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்காக கமலுக்கும் பல கோடியே சம்பளமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிக் பாஸ் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..  பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அசிங்க அசிங்கமாக பேசுவதை பிக் பாஸ் நிகழ்ச்சியை அப்படியே காண்பிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி உள்ளே காதலிப்பவர்களின் காதலானது வெளியே வந்ததும் புஸ்வனம் ஆகிவிடும்.  பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் விவாகரத்தான பெண்களாக தான் இருக்கிறார்கள் மேலும் அந்த வீட்டில் மது அருந்துவதும் புகைபிடிப்பதற்கும் தனி அறைகள் இருக்கிறது.

நான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல மாட்டேன் ஏனென்றால் எனக்கு சூடு சொரணை இருக்கிறது என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப பிக் பாஸ் வீட்டில் போய் விளையாடு வருபவர்கள் எல்லாம் நீங்கள் குறை சொல்கிறார்களா எனக் கூறி கமெண்ட்டு அடித்து வருகின்றனர்.