Bayilvan Ranganathan: சினிமாவே வேண்டாம் என ஓட்டம் படித்த நடிகைகள் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் அவர்களுக்கான மவுசை தக்க வைத்துக்கொள்ள பலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.
அப்படி ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு ஆசைப்பட்டு வந்து ஆனால் அங்கு இருக்கும் பிரச்சினைகளை பார்த்துவிட்டு சினிமாவே வேண்டாம் என அலறி அடித்து ஓடி உள்ளார்கள். பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, முக வசியம் இல்லாத பெண்கள் கூட சினிமாவில் நடித்தால் அவர் பிரபலம்.
மேக்கப்பில் அவ்வளவு பில்டப் செய்து விடுவார்கள் நடிகைகளுக்கு அவ்வளவு மவுசு அதற்காகத்தான் நடிகைகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். காரணம் அதற்கு அவ்வளவு கூட்டம் வரும் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை பத்மினி. காங்கிரஸ் கட்சிக்காக கூட்டம் வரும் ஆனால் ஓட்டு விழாது. சில படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆசையில் சிலர் சில நடிகைகள் டார்ச்சர் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள் அப்படி ஒதுக்கியவர்கள் குறித்து பார்க்கலாம்.
இது நெகட்டிவ் விமர்சனம் தான் ஆனால் நடிகைகள் பற்றி இவ்வளவுதானா என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன். மற்றபடி அவர்களை அவதூறு பரப்பும் எண்ணம் எனக்கு இல்லை கமலுடன் நடித்த நடிகை அபிராமி. அதன் பின் இரண்டு படம்தான் நடித்தார் அதோடு வெளிநாடு போய்விட்டார் சமீபத்தில் தான் வந்தார்.
நாட்டுப்புற பாடகி நடிகை இயக்குனர் வற்புறுத்தலில் சினிமாவுக்கு வந்து இங்கு வந்து பார்த்தபின் ஏண்டா வந்தோம் என்று கடுப்பாகி தயாரிப்பாளரை அழைத்து சீக்கிரம் என் காட்சிகளை எடுத்து முடிங்க என்று கூறிய அதோட சினிமாவை விட்டு ஓடினார். சினிமா எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறதோ அந்த அளவிற்கு அதை நான் சொல்லக்கூடாது நானும் சினிமாவில் இருப்பவன் சினிமா அந்த அளவிற்கு மோசமானது.
மற்றொரு பரத நடிகை ஒரு அமைச்சரின் தொடர்பில் இருந்தார் அரசியலாளர் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினர். அதோடு அவருடைய திரை வாழ்க்கை முடிந்தது அப்புறம் ஒருவரை திருமணம் செய்தால் மூன்று மாதத்தில் விவாகரத்து செய்துவிட்டார். அதேபோல கவர்ச்சியை கையில் எடுக்காத நடிகை, ரஜினி அறிமுகம் செய்த சீரியல் நடிகை இவர்கள் அனைவரும் திருமணத்தால் வாய்ப்பு இழந்து வீட்டில் முடங்கினார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.