பவி டீச்சர் மேல ரொம்ப பாசத்தை காட்டும் பார்த்திபன் – அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..

parthipan
parthipan

தமிழ் திரை உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் இந்த படம் வசூலும் சிறப்பாக நடத்தி வருகிறது.

நடிகர் பார்த்திபன் படம் என்றாலே கதை சற்று வித்தியாசமாக தான் இருக்கும் அந்த வகையில் இரவில் நிழல் திரைப்படத்தையும் சிறப்பாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பிரகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பிரிகிடா இதற்கு முன் ஆஹா கல்யாணம் என்ற குறும்படத்தில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர். இதைத்தொடர்ந்து  வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் நடித்துள்ளதால் இந்த படம்.

குறித்து அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் நடித்த காட்சிகள் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் கூறியது “சேரி பக்கத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள்” அதனால் தான் நாங்கள் இந்த படத்தில்  பேசினோம் என்று சொல்ல அது அவருக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. பின்பு பிரிகிடா தெரியாமல் பேசி விட்டேன் என மன்னிப்பும் கேட்டு உள்ளார்.

இவர் கேட்டவுடன் இயக்குனர் பார்த்திபனும் இவர் சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறியது பிரிகிடா தெரியாமல் சொல்லிவிட்டார் கெட்ட வார்த்தை இப்பொழுது உள்ள 2022ல் சேரில் உள்ள மக்கள் பேசுவதில்லை ஆனால் 1990களில் பேசினார்கள் அதனை தான் நாங்கள் படமாக எடுத்து உள்ளோம் என்று பேசி பவி டீச்சருக்கு மிகவும் வக்காலத்து வாங்கியுள்ளார். இதனால் நடிகர் பார்த்திபன் எவ்வளவு சர்ச்சை ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டார் ஆனால் இந்த விஷயத்தில் பவி டீச்சருக்காக மன்னிப்பு கேட்டது சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது. பார்த்திபனுக்கு பிடித்து விட்டால் எந்த நடிகையையும் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார் என்பதை சினிமா உலகம் அறியும். அந்த வகையில் இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையான பவி டீச்சரை  ரொம்ப பிடித்து போய்விட்டது போல அதனால் தான் இப்படி பேசி வருகிறீர்கள் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன