சிம்புவை விமர்சித்த யூடியூப் சேனலுக்கு சரியான பதிலடி கொடுத்த பத்து தல பட இயக்குனர்.! ஆதரவளிக்கும் ரசிகர்கள்..

pathu thala
pathu thala

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தனது டீன் ஏஜ் பருவத்தில் பல விமர்சனங்களில் சிக்கிக்கொண்டு தற்பொழுதுதான் பல பிரச்சனைகளுக்குப் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் சிம்பு. இவர் வாரிசு நடிகராக அறிமுகமானார், இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பதால் இவருக்கு தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்தார்.

இவ்வாறு குழந்தை நடிகராக அறிமுகமான இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு இடையில் இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைப் பெற்று வந்தது. இப்படிப்பட்ட நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் சிம்பு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கிய இவருக்கு அந்த திரைப்படம் தோல்வியை பெற்றிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சிம்பு தொடர்ந்து நல்ல கதைய அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்கலுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார் மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்,எஸ்.கே சூர்யா, பிரேம்ஜி,உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் பல பிரச்சினைகளுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியானது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

மேலும் ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிம்புவின் வெந்து தணிந்து காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.

இந்த படத்தினை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக்க உள்ள பத்து தல திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியவர்கள் நடிக்க இருக்கிறார்கள் மேலும் ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் மேலும் நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலை பத்து தல படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிம்பு சென்னை கிளம்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு சேனலில் மூலம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதாவது அதில் அவர்கள் கூறியிருந்தது சிம்பு பத்து தல படத்தில் நடிக்கிறார் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிந்து படம் வெளியாக இருப்பதாக கூறி இருந்தார்கள்.ஆனால் திடீரென்று சிம்பு கிளம்பி சென்னை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது என்றால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிம்பு காரில் இருந்து இறங்கி விமானத்தில் ஏற வேண்டும் அப்பொழுது வரும்போது சிம்பு சட்டையை கழட்டி வரவேண்டும் என்று இயக்குனர் சொன்னார் ஆனால் சிம்பு திடீரென எனக்கு ஒரு மாசம் டைம் கொடுங்கள் அதற்குப் பிறகு இந்த காட்ச்சில் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார் உடனே இயக்குனர் அந்த மாதிரி எல்லாம் வேண்டாம் என்று சொன்னாராம்.

இருந்தாலும் சிம்பு இல்லை எனக்கு ஒரு மாதம் நேரம் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார் இப்படி இவர்கள் சிம்புவை கலாய்த்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது இதனை பார்த்த பத்து தல இயக்குனர் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் நாங்கள் எதிர்பார்ப்பதை விட சிம்பு ஒத்துழைப்பு தந்து வருகிறார் கவனத்தை எதிர்பார்க்கும் வலைப்பேச்சு அங்கிள், எதைப் பற்றியும் தெரியாமல் பேச வேண்டாம் என பதிலிட்டுள்ளார்.