ரஜினி வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது பாட்ஷா திரைப்படம் தான். இந்த திரைப்படம் ரஜினியின் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் பாட்ஷா படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினி, ரகுவரன், ஆனந்தராஜ், விஜயகுமார், மற்றும் நடிகை நக்மா உள்ளிட்டோர் பாட்ஷா திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படம் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த ஒரு ஹிந்தி திரைப்படத்தின் ரீமிக்ஸ் திரைப்படம் தான் பாட்ஷா. அதனைத் தொடர்ந்து பாட்ஷா திரைப்படத்தை இயக்குவதற்கு ஆர் கே செல்வமணி மற்றும் மனோபாலா ஆகிய இருவருக்கும் வாய்ப்புகள் வந்ததாகவும் இந்த படத்திற்கு தேவா இசையமைக்க வேண்டும் என்று ரஜினி சொன்ன ஒரே காரணத்தால் ஆர்கே செல்வமணி இந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு ரஜினியின் ஊர்க்காவலன் திரைப்படத்தை இயக்கிய மனோபாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தவுடன் வேறொரு இயக்குனரை அதாவது சுரேஷ் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்து விட்டதாக மனவள அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் உருவான வீரா திரைப்படத்தை தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் இவர்களது கூட்டணியில் தொடர் வெற்றியை கொடுத்தது. மேலும் பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு நண்பனாக முதலில் மலையாள நடிகர் மம்முட்டி தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஏற்கனவே தளபதி திரைப்படத்தில் நடித்ததால் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி அவர்கள் சரண் ராஜாவை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
நடிகர் சரண்ராஜ் சினிமாவில் வில்லனாக சிறிது ஆண்டுகள் வலம் வந்தார். 90களில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.