வயதில் மூத்த நடிகை காதலிக்கும் பசங்கப் பட ஹீரோ.!

kishore

கடந்த 2009ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பசங்க இந்த படத்தினை சசிகுமார் தயாரித்திருந்தார். மேலும் ஏராளமான புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன் அறிமுகமான இந்த பசங்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது ஹீரோவாக விமலும் அவருக்கு ஜோடியாக நடிகை வேகா நடித்திருந்தார்.

இவர்களை அடுத்து சில குழந்தைகள் முக்கிய கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி இயங்கும் பிரபலம் அடைந்தவர் தான் கிஷோர் இந்த திரைப்படத்தினை அடுத்து கோலி சோடா, கோலி சோடா 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இதனை அடுத்து சகா, ஆறு அத்தியாயம், வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கிஷோர் தற்பொழுது தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அது வேறு யாருமில்லை சீரியல் நடிகை மாடல் மற்றும் தொகுப்பாளரான ப்ரீத்தி தான்.

கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் தான் ப்ரீத்தி குமார் இவர் தமிழ் சின்னத்திரையில் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் மற்றும் வானத்தைப்போல உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் சமீபத்தில் தன்னுடைய 32வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.

kishore
kishore

எனவே அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கிஷோர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சுமா உன்னை திருமணம் செய்து கொள்ள காத்திருக்கிறேன் அடுத்த வருடம் நாம் நம் பிறந்த நாள் மற்றும் அனைத்து விசேஷங்களையும் கணவன் மனைவியாக கொண்டாடுவோம் ஐ லவ் யூ அச்சுமா.. என குறிப்பிட்டுள்ளார். எனவே இதற்கு பதில் அளித்த பிரீத்தி லவ் யூ ஆச்சும்மா என குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.