ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து வந்த பல நடிகைகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பானுப்பிரியா இவர் 80இன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் இவரது திருமண வாழ்க்கையில் அதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் பின்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது என கூறப்படுகிறது இருவருக்கும் ஒரு சில காரணங்கள் குறித்து கடந்த 2005 இல் விவாகரத்து பெற்றுக்கொண்டு தனது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறாராம் பானுப்பிரியா.
மேலும் இவரை பற்றி தான் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதாவது இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளாராம் ராஜதுரை,சத்ரியன், காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் இவர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்து வந்தாராம்.
இவ்வாறு நடித்து வந்த இவர் திடீரென விஜயகாந்தை வைத்து ஒரு திரைப்படத்தையும் தயாரித்தார் ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து வெளியாகாமல் இருந்துள்ளது.
இதனால் பல கஷ்டங்களை அனுபவித்த நடிகை பானுப்பிரியா ஒருகட்டத்தில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா அதனால் தான் இவரை தற்போது சினிமா பக்கமே பார்க்க முடியவில்லையா என பாவமாக இவரைப் பார்த்து கூறிவருகிறார்கள்.