விசேஷ நாட்களில் அஜித் படங்கள் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் அஜித் தற்பொழுது நடித்துள்ள 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க அயோக்கியர்களின் ஆட்டம் நிறைந்த ஒரு திரைப்படமாக இருக்கும் என ஏற்கனவே ஹச். வினோத் சொன்னார் அதற்கு ஏற்றார் போலவே வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் இருந்தது கடைசியாக படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது அதை உறுதி செய்து விட்டனர்.
மேலும் இந்த ட்ரைலரை பார்த்த பிறகு பலரும் பல்வேறு விதமான கதைகளை கூறி வருகின்றனர். குறிப்பாக சொல்வது துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் உள்ளேயே நடக்கும் ஒரு ராபரி தான் படமாக எடுத்து வைத்துள்ளனர் என கூறிய வருகின்றனர் ஆனால் உண்மையில் பேங்க் ராபரி என்பது படத்தில் ஒரு பகுதி தான்.
ஆனால் மற்ற விஷயங்களும் இதில் இருக்கு என ட்விஸ்ட் வைத்துள்ளார் இளம் இயக்குனர் ஹச். வினோத்.. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் படம் வங்கி கொள்ளை மட்டும் கிடையாது அதையும் தாண்டி மக்களிடம் லோன் என்கின்ற பெயரில் வங்கி அடிக்கிற கொள்ளை பற்றியது தான் துணிவு.
மேலும் இயக்குனர் ஹச். வினோத் துணிவு மூலம் வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து எடுக்கவில்லை துணிவு அயோக்கியர்கள் ஆட்டம் என்றும் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த தகவலையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.