இந்திய அளவில் ரசிகர்களை மிரளவைத்த பாலாவின் 5 மெகா ஹிட் திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் வேற லெவல் தான்..!

bala
bala

தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் அந்த வகையில் இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் பலவகையான திரைப்படங்கள் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது அந்த வகையில் அவர் இயக்கிய திரைப்படங்கள் இதோ.

சேது 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி கொண்டது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது இத்திரைப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அபிதா நடித்திருப்பார்

sethu-1
sethu-1

நந்தா திரைப்படமானது சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் ராஜ்கிரன், கருணாஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் இத் திரைப்படமானது சீர்திருத்த பள்ளியில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

பிதாமகன் இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா என இரண்டு நடிகர்களுடன் நடித்து இருப்பார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமின் நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருது கொடுத்து வழங்கியது மட்டும் இல்லாமல் பாலாவின் ரேஞ்சே இந்த திரைப்படத்திற்கு பிறகு மாறிவிட்டது.

நான் கடவுள் திரைப்படமானது பாலா இயக்கிய திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா மற்றும் நாயகியாக பூஜா நடித்திருப்பார் மேலும் இதர கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் தான் இசையமைத்து இருந்தார் மேலும் இத்திரைப்படம் ஒரு அகோரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த திரைப்படமாகும்.

அவன் இவன் என்ற திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா என இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள் இவ்வாறு இந்த திரைப்படத்தில் விஷால் நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பெரும் பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருக்கு விருதும் வழங்கியது இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டு வசூலில் வென்றது.