தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் பாலா இவர் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் மிக வித்தியாசமான கதைக்களம் உள்ளதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறது.
அந்தவகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக விருது வாங்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விருது வாங்க ஆசைப்படும் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் பாலாவை தேடி செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் நான் அப்படிப்பட்ட திரைப்படத்தில் கூட நடிப்பேன் ஆனால் பாலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இயக்குனர் பாலா வெற்றிப்படங்கள் கொடுத்து மிக நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது அதுமட்டுமில்லாமல் தற்சமயம் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெருமளவு சாதிக்கவில்லை
இவ்வாறு நடைபெறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாலாவின் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் யாருமே நடிக்காமல் இருப்பது தான் அந்த வகையில் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க வேண்டும் என பாலா ஒற்றைக்காலில் நின்றபடி இருக்கும் நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கீர்த்தி சுரேஷ் என்னால் முடியாது என கூறிவிட்டாராம்.
பொதுவாக சாதாரண நடிகைகளையே நமது இயக்குனர் பாலா சாக்கடையில் முக்கிய எடுத்தது போல் திரைப்படத்தில் காண்பிப்பார் அதுவும் கீர்த்தி சுரேஷ் என்றால் அவரை எந்த கோலத்தில் வேண்டுமானாலும் காட்டுவார் என்ற அச்சத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க தயங்குகிறாராம்.
அந்த வகையில் ஒரு கூட்டம் எப்படியாவது சம்பளத்தை அதிகமாக கொடுத்து கீர்த்தி சுரேசை நமது திரைப்படத்தில் நடித்து விடலாம் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார்கள். இந்நிலையில் கடைசியில் என்னதான் நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.