சினிமாவை பொறுத்தவரை பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு – அதை வெடிக்க வைக்கும் சக்தி இந்த இயக்குனருக்கு மட்டுமே உண்டு – ராஜமௌலி சூப்பர் பேச்சு.

balakrishna-

தெலுங்கு சினிமாவில் இப்பொழுது இருக்கும் நடிகர்கள் பலரும் சிறந்த படைப்புகளை கொடுக்கன்றனர் அவர்களுக்கு ஈடு இணையாக 90 காலகட்டங்களில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்து இப்போதுவரையிலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருபவர் ஆக்சன் ஹீரோ பாலகிருஷ்ணா.

இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி வரும் அந்த காரணத்தினால் தான் இவரது திரைப்படங்களுக்கு இன்னும் நல்ல வரவேற்பு இருக்கிறது தற்போது கூட இவர் ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கு “அகான்டா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை பொயா பட்டி சீனு இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது இதுவரை இரண்டு கோடிக்கு மேல் அந்த டிரைலரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு விழாவிற்கான முந்தைய நிகழ்ச்சியில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது இதில் பல்வேறு தெலுங்கு பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராக ராஜமௌலி, அல்லு அர்ஜுன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

இந்த குறித்து பேசிய ராஜமவுலி : பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு அந்த அணுகுண்டு எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என்பது பொயா பட்டி சீனு அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அந்த ரகசியத்தை அவர் மட்டுமே வைத்துக்கொள்ள கூடாது மற்றவர்களுக்கும் அதை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார் .

இதுவரை அந்த படத்தில் இருந்து வெளியான ப்ரோமோவில் பார்த்தது எல்லாம் ஒரு முன்னோட்டம் தான் ஆனால் படத்தில் இன்னும் அதிகமான அற்புத காட்சிகள் இருக்கும் உங்களை போலவே நானும் இந்த படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் அதன் பின் பேசிய அல்லு அர்ஜுன் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா சாரை பார்த்து தான் வளர்ந்து உள்ளேன் சினிமா மீதான பாலகிருஷ்ணனின் சாரின்  டயலாக் உச்சரிப்பை பார்த்து வியந்திருக்கிறேன் அவரது டயலாக் டெலிவரியை வேறு எந்த நடிகராலும் ஈடு செய்ய முடியாது என கூறி பேசியிருந்தார்.